மதுரை நரிமேடு பகுதியில் உள்ள லேடிடோக் கல்லூரி வளாகத்தில்  எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மற்றும் பணம் டெபாசிட் இயந்திரமும் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஏ.டி.எம்., இயந்திரம் மற்றும் டெபாசிட் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

 





 

இதனை தலைமை அலுவலகத்தில் இருந்து சி.சி.டி.வி., மூலமாக கண்காணித்த அதிகாரிகள் உடனடியாக தல்லாகுளம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து விரைந்துவந்தனர். இதனையடுத்து ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மதுரை அண்ணாநகர் சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த நித்யானந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்த ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.