திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகள் கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை அருகே லாலாபேட்டை காந்திசிலை முன்பாக கிருஷ்ணராயபுரம் கிழக்கு, மேற்கு ஒன்றிய அதிமுக சார்பாக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்குமரன் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழிப்பியும், பதாகைகள் கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லாலா பேட்டை காந்தி சிலை முன்பாக கிருஷ்ணராயபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் சார்பாக தமிழக அரசு விலைவாசி உயர்வை கண்டித்து கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் இளங்குமரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாரி வரவேற்றார், ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து கண்டன வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியும், தமிழக அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார், மாவட்ட கழக பொருளாளர் எம் எஸ் கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் சிவானந்தம் ஆகியோர்கள் ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் குளித்தலை நகரச் செயலாளர் இன்ஜினியர் மணிகண்டன் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர் ஆகிய 8 ஒன்றியங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அந்தந்த பகுதி ஒன்றிய கழக செயலாளர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.