பழனியில் நடந்து சென்ற மூதாட்டி இடம் நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி கீழே விழுந்து தப்பி ஓடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.




திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரம் என்பவரது மனைவி சுலோச்சனா (71). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ரெணகாளியம்மன் கோவில் அருகே சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அர்ச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினர். அதில் ஒருவரை மட்டும் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.




இந்நிலையில் நகைபறிப்பில் ஈடுபட்டவர்கள் தப்பிச்செல்லும்போது விபத்தில் சிக்கி கீழேவிழும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த காட்சியில் நகையை பறித்துக்கோண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச்செல்லும் இருவரும் முன்னால் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதி மின்கம்பத்தில் மோதி கீழே விழுவதும், விழுந்தவுடன் பலத்த காயத்துடன் இருவரும் சுலோச்சனாவிடம் இருந்து பறித்து சென்ற நகையை கீழே போட்டுவிட்டு தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது.




திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து பாறை விழுந்து கார் சேதமடைந்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




திண்டுக்கல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிறிது நேரம் கனமழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் பகுதியில் ஆர்.வி நகர் மற்றும் முத்தலகுபட்டி பகுதி உள்ளது. இப்பகுதியில் முத்தழகுப்பட்டி மற்றும் சின்னகாளை நகர் சந்திப்பு இடத்தில் மலைக்கோட்டை மேல் பகுதியில் இருந்து திடீரென பாறை உருண்டு விழுந்தது.




இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பெண்கள் உயிர் தப்பினர். மேலும் அந்த பாறைகள் அப்பகுதியில் உள்ள தனியார் கடலை மிட்டாய் கம்பெனி காரின் பின்புறம் பகுதியில் பட்டதால் கார் நசுங்கி சேதமடைந்தது. இதனால் நூலிலையில் உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் இந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மலைக்கோட்டையில் இருந்து பாறை உருண்டு விழும்  சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண