தேனி: பதினெட்டாம் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய், பி.டி.ஆர் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மூலம் விவசாய பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாத விடிய அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்டிகே சச்சின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய கண்டன உரையில் விடியாத திமுக ஆட்சி விவசாயிகளை எப்பொழுதும் வஞ்சித்து வருகிறது.
MP Suspension: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உட்பட 15 பேர் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அதிரடி..
உடனடியாக பதினெட்டாம் கால்வாய் பி.டி.ஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு தேனி மாவட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றும்படியாகவும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படும் விதமாக பதினெட்டாம் கால்வாய் பிடிஆர் கால்வாய் தந்தை பெரியார் கால்வாய் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது..
Premalatha Vijayakanth : ’பொருளாளர் - பொதுச்செயலாளர்’ பிரேமலதா விஜயகாந்த் அரசியல்வாதியான கதை..!
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். எஸ்டிகே கண்டன உரையை முன்மொழிந்தார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 18ம் கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த பின்பும் 18 ஆம் கால்வாய் தந்தை பெரியார் கால்வாய் தண்ணீர் திறந்து விடாத காரணத்தினால் தேனி மாவட்ட விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களை வஞ்சித்து விவசாயிகளை அடிவயிற்றில் அடித்து தான் மட்டுமே சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகவும் உடனடியாக தேனி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று பதினெட்டாம் கால்வாய் தந்தை பெரியார் கால்வாய் பி டி ஆர் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கண்டன உரை எழுப்பப்பட்டது.