சென்னை பெரு வெள்ளத்தில் காவலர்கள் பணி பெருமைப்படும் விதமாக அமைந்தது. இதனால் காவல்துறையினருக்கு இணையத்தில் பாராட்டு குவிந்தது. ஆனால் காவல்துறையில் சில அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செய்யும் தவறான செயல் பொதுமக்களை முகம் சுழிக்க செய்கிறது. அப்படியான சம்பவம் ஒன்று சிவகங்கையில் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 






சிவகங்கை மாவட்டம் பனங்காடி சாலையில் அன்னை இல்லம் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தங்கியுள்ள மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு காவலர் அங்கு பணியில் இருக்கும் படி உத்தரவிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்லமுத்து என்பவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.




இந்நிலையில் இரண்டு நாட்களாக பாதுகாப்பு பணியில் இருக்கும் செல்ல முத்து மது போதையில் பனங்காடி சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை பணம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. பெண்களையும் விட்டு வைக்காமல் காவலர் சீருடையில் செல்லமுத்து தள்ளாடும் மது போதையில் பணம் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்ற பலரும் மனம் நொந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் காவலரின் செல்ல முத்துவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


- மதுரையில் பைக் வீலிங் செய்த 39 பேர் கைது; இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் - போலீஸ் அதிரடி





மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்புக்காக வந்த காவலர் மது  போதையில் சட்டத்திற்கு விரோதமாக  நடந்துள்ளார். இவர் எப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சட்டத்தை பாதுகாக்கும் காவலரே வேலியை பயிரை மேய்ந்த கதையாய் மாறி சட்ட விரோதமாக செயல்பட்டது சிவகங்கை மக்களை அச்சமடைய செய்துள்ளது.


மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா