மாணாக்கர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர், நேற்று தெற்குதெரு அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது சிரத்தன்மையுடன் மரம் இருந்தது வகுப்பறைகள் தேர்வறையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மர நிழலில் படித்துகொண்டிருத்த மாணாக்கர்களுக்கு மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்களின் சிரத்தன்மை கண்காணிப்பு குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பேட்டி.

 

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தெற்குதெரு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரையாண்டு தேர்விற்காக மாணவ மாணவியர்கள் ஆங்காங்கே மரத்தின் கீழ் அமர்ந்து படித்துகொண்டிருந்துள்ளனர். 




 

இந்நிலையில் திடீரென பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் மரத்தின் கீழ் படித்துக்கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர் என 13 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள்  16 மாணாக்கர்கள் காயமடைந்தனர். முதற்கட்டமாக தெற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ்கள் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவிற்கு அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காயமடைந்த மாணாக்கர்களுக்கு X- RAY எடுக்கப்பட்டது. இதில் மாணாக்கர்களுக்கு பெரிய அளவிலான காயம் எதுவும் இல்லாத நிலையில் அடுத்தகட்ட கண்காணிப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணாக்கர்களின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்த நிலையில் மாணாக்கர்களை சிகிச்சைக்காக அழைத்துசென்றபோது கண்ணீர் விட்டு அழுதனர். 



 

இதனிடையே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற மாணாக்கர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு விபத்து குறித்தும் கேட்டறிந்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பேசுகையில்...,”அரையாண்டு தேர்விற்காக மர நிழலில் படித்துகொண்டிருந்த மாணாக்கர்களுக்கு மரம் விழுந்து சிறிய அளவு சிராய்ப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். நேற்று தெற்கு தெரு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் சிரத்தன்மையுடன் இருந்த மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.



 

போதுமான கட்டிடம் இருக்கிறது எனவும், வகுப்பறைகள் தேர்வறையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மர நிழலில் படித்துகொண்டிருத்த மாணாக்கர்களுக்கு மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்களின் சிரத்தன்மை கண்காணிப்பு குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.