தேனி : வைகை அணையில் 69 அடி நீர் மட்டம் உயர்ந்ததால் கரையோர மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் 69 அடி நீர் மட்டம் உயர்ந்ததால் கரையோர மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Continues below advertisement

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாக இருந்த போதும், அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது முழு கொள்ளளவை எட்டியதாக கணக்கிடப்படுகிறது.  நேற்று மாலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Continues below advertisement

தீபாவளி புத்தாடை வாங்கி கொண்டு குடும்பத்துடன் வந்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

இதனால் மூல வைகை ஆறு, முல்லைப்பெரியாறு கொட்டக்குடி ஆறு-ஆகிய ஆறுகளில் இருந்து அதிகப்படியான நீர்வரத்தால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்படுவதாக நீர்வளத்துறையினர் அறிவித்தனர். இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் இன்று  69 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காதல் திருமணம்..நகை பிரச்சினை..அண்ணனை வெட்டிக்கொன்ற பெண்ணின் தந்தை - நாங்குநேரியில் பயங்கரம்

வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 2569 கன அடியாக உள்ளது. ஏற்கனவே வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஐந்தாம் தேதி அதிகாலை 3 மணி அளவில் 66 அடியை எட்டிய போது கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து மழை நீடித்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,வைகை அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து நேற்று மாலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது.

ODI Ranking: பேட்டிங், பவுலிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் முதலிடம்! பின்னுக்குத் தள்ளப்பட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்கள்!


இதனால் தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்படுவதாக நீர்வளத்துறையினர் அறிவித்தனர்.இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் இன்று  69 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 2569 கன அடியாக உள்ளது.

Continues below advertisement