தேனி மாவட்டத்தில் அன்னஞ்சி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பைனான்ஸில் கடன் வழங்க ஆள் சேர்ப்பது கடனை வசூலிப்பது போன்ற பணிகளுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த 68 பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க 5000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் ஆட்களை சேர்க்க வேண்டும் என்று பைனான்ஸ் நிர்வாகம் கூறிய நிலையில், கடன் வழங்க ஆள் சேர்க்கும் வீதத்திற்கு தகுந்தபடி ஊதிய தொகையும் மாதாந்திர சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 20 நாட்களில் பலரை இந்த பைனான்ஸில் பணம் போடுவதற்கும், கடன் வாங்கி தருவதற்கான முன்பணமும் என சுமார் 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்து கொடுத்துள்ளனர். அதற்கு நிர்வாகத்தின் சார்பாக ரசீதும் கொடுக்கப்பட்டுள்ளது. திடீரென மைக்ரோ பைனான்ஸ் மூடப்பட்டது எனவும் பைனான்ஸ் நிர்வாகத்தினரை சேர்ந்தவர்களும் தலைமறைவாகியது தெரிய வந்தது. இந்த நிலையில் மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் சங்கரனிடம் நிதி நிறுவன ஊழியர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது இந்த நிதி நிறுவனத்தில் தேனி மாவட்டத்தில் 68 பேர் வேலை பார்த்தோம். இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான பொதுமக்கள் தனிநபர் கடன் திட்டத்தில் முன்பணம் செலுத்தினர். அந்த வகையில் மாவட்டத்தில் 80 லட்சம் வரை முன்பணமாக பொது மக்களால் செலுத்தப்பட்டது. இதற்காக பணம் செலுத்திய மக்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி பொது மக்களின் பணத்தை மோசடி செய்து விட்டு நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். களப்பணியாளர்களுக்கும் சம்பளம் தரவில்லை. பணம் கட்டிய பொதுமக்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால் நாங்கள் மாவட்ட கண்காணிப்பளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்தோம்.
அந்த புகார் திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிடிபட்டார். அவரிடம் 3.5 லட்சம், செல்போன், கணினி போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய மற்ற உரிமையாளர்களை தேடி கண்டுபிடிக்க போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, நிதி நிறுவனத்தில் பணியாற்றிய எங்களையும், பணம் செலுத்திய மக்களையும் ஏமாற்றி பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பணத்தையும், எங்களின் சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் என புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
பழனி மலை அடிவாரத்தில் சைரன் காருடன் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது
தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
’பருவ வயதை அடைந்ததும் யாருக்கும் தெரியாமல் வாசித்த புத்தகம் ’- கோவை ஆட்சியர் சொன்ன குட்டி ஸ்டோரி..!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்