தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த முட்டை கண்ணன் என்ற கண்ணதாசன்.   இளைஞரான இவர் மீது  திருட்டு, வழிப்பறி, கஞ்சா மற்றும் மது பாட்டில் விற்பனை  உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார். இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடியாக உள்ளார்.


 


இவர் நேற்று அழகர்சாமிபுரரத்தைச் சேர்ந்த  கரன்குமார் என்ற இளைஞரை பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுக்கும் பொழுது தகராறு ஏற்பட்ட போது, முட்டைக் கண்ணன் கரண்குமாரை தாக்கி கடித்து வைத்துள்ளார். இது தொடர்பாக கரண்குமார்  பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


மற்றொரு சிக்கல்... ஐ.ஏ.எஸ் மனைவி கொடுத்த தடாலடி புகார்! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது




ரவுடிக்கு கத்திக்குத்து:


இதனிடையே நேற்று இரவு ரவுடி முட்டைக் கண்ணன் என்ற கண்ணதாசன் மீது புகார் கொடுத்த கரண்குமாரை கத்தியை எடுத்து குத்துவதற்கு விரட்டி உள்ளார். இதனைப் பார்த்த அவரது சகோதரர் புகழேந்தி மற்றும் அவரது நண்பர்களான லிங்கேஸ்வரன், அழகர், மற்றும் சார்லி ஆகியோர் கத்தியை கொண்டு விரட்டிய ரவுடி முட்டகண்ணன் என்ற கண்ணதாசனை மடக்கிப்பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கிய நிலையில் கரண்குமார் அவரை கத்தியால் வயிற்றுப் பகுதி மற்றும் முதுகு பகுதியில் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.


வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! எங்கெல்லாம் மழை கொட்டப்போகுது தெரியுமா..?




இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர்  படுகாயம் அடைந்த ரவுடியை  மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில்  ரவுடி முட்ட கண்ணன் என்ற கண்ணதாசன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




Delhi-Jammu Highway Accident: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - புனித யாத்திரையின் போது பேருந்து & டிரக் மோதி கோர விபத்து


இதனைத் தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த  கரண்குமார், புகழேந்தி, அழகர், லிங்கேஸ்வரன், சார்லி என்ற   ஐந்து இளைஞர்களையும்  பெரியகுளம் வடகரை காவல்துறையினர்  விரைந்து குற்றவாளிகளை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.