திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
- மனைவியுடன் பிரச்னை; வரதட்சனை நகையை கொடுத்த கணவன் - கமுக்கமாக அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டர்
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Southern Railway: காரைக்குடியில் ரயில்களை பராமரிக்க ரூ.1.5 கோடியில் பணிமனை துவக்கம் - தென்னக ரயில்வே
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?