தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த கைலாசநாதர் மலைக்கோவில் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 27-ந்தேதி சோலார் மின்வேலியில் 2 வயது மதிப்புள்ள ஆண் சிறுத்தை ஒன்று சிக்கியது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனர்.
சிறுத்தையை மீட்க முயன்ற போது அது, உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை தாக்கியது. அதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டது. காயம் அடைந்த மகேந்திரன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Ponniyin Selvan Twitter Review: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
இந்த சம்பவம் நடந்த அதே வனப்பகுதியில், இருந்து சற்று தொலைவில் நேற்று ஒரு சிறுத்தை சோலார் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதுவும் 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை.
IND vs SA T20 : டி20 அப்டேட் இதோ இங்கே.. பும்ராவிற்கு பதில் களமிறங்கப் போவது யார் தெரியுமா?
இதுவனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தையாக இருக்கலாம் என்று வன ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமியிடம் கூறியபோது, "இந்த சிறுத்தை வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை இல்லை. வன அதிகாரியை தாக்கிய சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது அதே வயதுள்ள வேறு சிறுத்தை. இதுவும் சோலார் மின் வேலியில் சிக்கி தப்பிச் செல்ல முடியாமல் இறந்துள்ளது. இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரிய வரும்" என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்