கேரளாவில் காட்டு யானைக்கூட்டத்திடம் இருந்து தப்பிக்க ஒருவர் மரத்தின் மீது ஏறி ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து யானைகளிடம் இருந்து தப்பியுள்ளார். இவர் மரத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரட்டிய யானை கூட்டம்
காட்டுக்குள் சென்று காட்டு விலங்குகளை வீடியோ எடுக்கிறேன் என்று தொந்தரவு செய்வதை நாம் அதிகம் கொண்டிருப்போம். ஆனால் தான் உண்டு தன் வேலையுண்டு என்று சென்றுகொண்டிருந்த ஒருவரை யானை துரத்திய சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் நடந்துள்ளது. இந்த நபர் அந்த யானைகளை ஒன்றும் செய்யாத போதிலும், வித்தியாசமாக எதுவும் நடக்காத போதிலும் திடீரென்று காட்டு யானைக் கூட்டம் அவரை நோக்கி ஓடி வந்துள்ளதைக் கண்டா சஜி என்பவர் வேறு வழியின்றி மரத்தில் ஏறியுள்ளார். ஏனெனில் இடுக்கியின் மலைப்பகுதிகளில் ஒளிவதற்கு வேறு இடம் கிடையாது என்பதால் இவ்வாறு செய்துள்ளார். எக்காளம் முழங்க யானைகள் சூழ்ந்ததால் மூச்சை அடக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வைரல் விடியோ
பார்ப்போரை பதறவைக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே இது போன்ற காட்டு விலங்குகள் குறித்த வீடியோக்கள் வலைதளங்களில் குவிந்து கிடக்கும். அவற்றிடம் இருந்து தப்பிக்கும் விடியோ தற்போது வைரலாகி வருகிறது. சில உள்ளூர்வாசிகள் பதிவு செய்த இந்த வீடியோவில், இடுக்கியை சேர்ந்த அவர் மரத்தில் அமர்ந்திருப்பதையும், யானை அருகில் நின்றுகொண்டிருப்பதையும் காட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!
உதவிக்காக கத்தியுள்ளார்
கடந்த செவ்வாய் கிழமையன்று, சஜி ஊடகங்களிடம் அவர் எங்கோ கீழே தங்கியிருந்த தற்காலிக கொட்டகையில் இருந்து மலையின் உச்சிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார். இந்த துணிச்சலான இளைஞர் உள்ளூர் மக்களை உதவிக்கு அழைக்க மரத்தில் இருந்தபடிக்கு கத்தியுள்ளார்.
வனத்துறையினர் மீட்பு
மேலும் அவர் பேசுகையில், "சில யானைகள் திடீரென்று என் வழியில் ஓடி வந்தன. நான் அதிகம் யோசிக்காமல் மரத்தில் ஏறி அமர்ந்தேன். அடுத்த ஒன்றரை மணி நேரம் அங்கேயே உட்கார வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். அந்த பகுதிகளுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்ட போதிலும், யானைகள் நடமாடும் பகுதிக்கு இளைஞர்கள் அதனை காணுவதற்காக அடிக்கடி செல்கின்றனர் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யானைகளில் ஒன்று மரத்தின் அருகேயே இருந்ததால், அவரால் கீழே ஏற முடியவில்லை, அதிகாரிகள் திரும்பி வந்து அதை விரட்டும் வரை மேலேயே காத்திருக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டனர். ஆனாலும் சாமர்த்தியமாக மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்ட அவருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பலர் அந்த சமயத்தில் தவறாக முடிவெடுப்பது உண்டு. ஆனால் இந்த மனிதரோ யானைகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள சமயோஜிதமாக செயல்பட்டுள்ளார் என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.