தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பாவலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் நிகிதா ஸ்ரீ (7). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் சுபஸ்ரீ (6). ஜெகதீசன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் தனது மனைவியுடன் தங்கியிருந்து ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.


Ponniyin Selvan Twitter Review: எல்லாமே பிரமாண்டம்.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? பொன்னியின் செல்வன் ட்விட்டர் விமர்சனம் இதோ!




சுபஸ்ரீ பண்ணைப்புரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்த நிலையில், இவரும் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். நேற்று மாலை சுபஸ்ரீ, நிகிதாஸ்ரீ ஆகிய இருவரும் அங்குள்ள 7-வது வார்டில் உள்ள பெண்கள் கழிப்பறை அருகே வேப்பமரத்திற்கு கீழே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகே அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்) மீதும் ஏறி விளையாடினர். இதில் கழிவுநீர் தொட்டியின் மூடி பழுதாகி இருந்ததால் அதன் மீது மிதித்ததில் மூடி உடைந்து எதிர்பாராதவிதமாக சிறுமிகள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர்.


IND vs SA T20 : டி20 அப்டேட் இதோ இங்கே.. பும்ராவிற்கு பதில் களமிறங்கப் போவது யார் தெரியுமா?




இதை அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவா்கள் பாா்த்து பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இளைஞா்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமிகளை மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.


Viral Video : மூழ்கும் வீடுகள்.. பதைபதைப்பு காட்சிகள்.. புளோரிடா மாகாணத்தையே உருக்குலைத்த இயான் புயல்..




இதையடுத்து சிறுமிகளின் உடலை பாா்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே கழிவுநீர் தொட்டியை சீரமைக்காததால் சிறுமிகள் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் பண்ணைப்புரம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.