அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீசி வரும் இயான் வரலாற்றில் இல்லாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி அதி தீவிர புயலாக இயான் புயல் உருவெடுத்துள்ள நிலையில், புளோரிடா மாகாணத்தில் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.







இந்தப் புயலால் கடந்த இரண்டு நாள்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சாலை, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.


 






இந்நிலையில், அமெரிக்காவின் வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.






புளோரிடா மாகாணத்தில் இயான் புயலால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள சேதங்கள் மிக மோசமான அளவில் இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடுகள் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.




மேலும் படிக்க:Skytrax World Airline Awards 2022 : கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஏர்லைன்ஸ் பட்டியல் ! முதலிடத்தை பிடித்த ‘கத்தார் ஏர்லைன்ஸ்’!


Ukraine Soldier Pic : ரஷ்யா விடுவித்த உக்ரைன் வீரர்.. புகைப்படத்தை வெளியிட்டு உக்ரைன் கொடுத்த தகவல் என்ன தெரியுமா?