இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தால் உலககோப்பைத் தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் வரும் 2-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா ஆசிய கோப்பைத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. ஹர்ஷல் படேலும் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், இந்திய அணியின் பந்துவீச்சு ஆசிய கோப்பையில் மிகவும் மோசமாக இருந்தது.
இதையடுத்து, காயத்தால் இருந்து மீண்ட பும்ராவும், ஹர்ஷல் படேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பினர். ஆஸ்திரேலிய தொடரில் ஹர்ஷல் படேலும், பும்ராவும் சிறப்பாக பந்துவீசினர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக பும்ரா களமிறங்கவில்லை.
இந்த நிலையில், பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அடுத்து வரும் போட்டியில் அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய பும்ரா உலககோப்பையிலும் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். இதை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. உலககோப்பை டி20 தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பும்ரா காயத்தால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கவுகாத்தியில் அக்டோபர் 2-ந் தேதியும், 4-ந் தேதி இந்தூரிலும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்பின்னர், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் விவரம் : ரோகித் சர்மா ( கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்) விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின், சாஹல், அக்ஷர் படேல், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் படேல், தீபக்சாஹர், உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ்