ஓபிஎஸ் பண்ணை வீட்டின்  கதவை உடைத்து  டி.வி.யை  தூக்கிச் சென்ற கொள்ளையர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது.  இந்தப் பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகளில் ஒன்று பார்வையாளர்களை சந்திப்பதற்கும், மற்றொன்று ஓபிஎஸ் முக்கிய நபர்களை சந்திப்பதற்குமான இரண்டு அறைகள் உள்ளது. மேலும் அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வு பெறுவதற்கான அறை ஒன்று தனியாக உள்ளது.

CM Stalin: “ஒன்றேகால் ஆண்டில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து, அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்ததில் நகை மற்றும் பணம், பொருள் உள்ளிட்டவைகள் ஏதும் இல்லாத நிலையில் 54 இன்ச் டிவியை மற்றும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

மோடியின் இந்தி திணிப்பு தமிழகத்தில் நிகழாது - எம்பி கெளதமசிகாமணி

இன்று காலையில் வழக்கம் போல பாதுகாவலர்கள் சென்ற போது மேல் மாடியில் அறை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

AIADMK MLA Meeting; சட்டப்பேரவை கூட்டத்தொடர் எதிரொலி: நாளை அவசரமாக கூடுகிறது அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!

மேலும் ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள்  டி.வி.யை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண