AIADMK MLA Meeting; அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்  நாளை மாலை அவசரமாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. நாளை மறுநாள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால், அவசர அவசரமாக இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தினை அதிமுக தலைமை கூட்டுகிறது. 


நாளை மறுநாள் காலை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இதனை எதிர் கொள்ள ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர் கட்சியான அதிமுக ஆகியவை தொடர்ந்து உட்கட்சி கூட்டத்தினை நடத்தி வருகிறது. ஏற்கனவே திமுக தனது பொதுக் குழு கூட்டத்தினை நடத்திய நிலையில், தற்போது அதிமுக தனது எம்.எல்.ஏ கூட்டத்தினை நடத்த முடிவு செய்து இருக்கிறது. 


சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே சட்டசபை கூட்டத்தொடர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்த நிலையில், அதிமுகவின் சட்டமன்ற  எதிர் கட்சித் துணைதலைவர் ஓ. பன்னீர் செல்வம், ‘சட்ட சபையில் அதிமுக குறித்து எந்த முடிவு எடுத்தாலும் என்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டு கடிதம் எழுதி இருந்தார். 


கடந்த சட்டமன்ற கூட்டத்தொடருக்கும், நாளை மறுநாள் கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்கும் இடையில் அதிமுக கட்சியானது ஒற்றுமையாக இல்லை. தமிழ்நாட்டின் பிரதான எதிர் கட்சியான அதிமுக கட்சி  ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து உள்ளது.  இதற்கு முன்னர் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர் கட்சியான அதிமுக ஆளும் கட்சியான திமுகவை எப்படி எதிர் கொள்வது, திமுக ஆட்சியில் நடக்கும் மக்கள் விரோத செயல்கள் குறித்தும் கேள்வி எழுப்பி மக்கள் மத்தியில் அதிமுக கட்சிக்கு நற்பெயரினை எடுக்க  திட்டமிடுவார்கள். 


ஆனால் இந்த முறை அதிமுக அலுவகத்தில் நாளை மாலை கூட்டப்படும் இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தொடரானது ஓபிஎஸ் மற்றும் அவரது அணி எம்.எல்.ஏக்களை எப்படி எதிர் கொள்வது என்பதை திட்டமிடவும், யாரும் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களுக்கு இசைந்து செல்வதுபோல் நடந்து கொள்ளகூடாது என்பதை மிகவும் கராராக சொல்லவும் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கவுள்ளதாக அதிமுக நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.  


அதிலும் குறிப்பாக, எதிர் கட்சியினர் அமரும் வரிசையில் இதற்கு முன்னர் அதிமுவின் சார்பாக ஓபிஎஸ் அமர்ந்து இருந்தார். ஆனால், இந்த முறை அவையில் ஒபிஎஸ்ஸை அமரவிடக்கூடாது எனவும், அந்த இருக்கையில் இபிஎஸ் தான் அமர வேண்டும் என ஏற்கனவே இபிஎஸ் முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஓபிஎஸ் தான் அமர முயற்சி செய்தால் அதனை தடுக்கவும் செய்யவேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அறிவுருத்தவும் நாளை நடக்கவுள்ள கூட்டத்தில் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகம், சட்டசபை, சாலை, நீதி மன்றம் என இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி மோதல் தற்போது மீண்டும் சட்டசபையில் நாளை மறுநாள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 




T20 World Cup: ஒரு ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிக ரன்கள் விளாசிய ஜாம்பவான்கள்; ஒரு பார்வை!