திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது . இந்த அரசு மதுபான கடையில் உள்ள பாரில் நான்கு இளைஞர்கள் மது அருந்துவதற்காக வந்துள்ளனர்.மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.


தேர்வுக்கு முன்பே வெளியான வினாத்தாள்.. உடனடியாக தேர்வை நிறுத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்! நடந்தது என்ன?




இதில் வேடசந்தூர் கொள்ளம்பட்டறையை சேர்ந்த கஸ்பா ராஜா என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதாம் உசேன் என்பவரின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சதாம் உசேன் மதுபான கடையின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். ரத்தம் சொட்ட சொட்ட தர்ணாவில் ஈடுபட்ட நபரை கண்ட அப்பகுதியினர் உடனடியாக வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


WPL 2023 Orange Cap: முதற்பாதியை கடந்த தொடர்… சூடுபிடிக்கும் ஆரஞ்சு கேப் போட்டி… பட்டியலில் முதலிடம் யார்?




சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்தம் சொட்டிய நிலையில் தர்ணாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சதாம் உசேனை கண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் சதாம் உசனை ஆம்புலன்ஸில் ஏற  அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்து என்னை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லையெனில்  நான் இந்த இடத்தை விட்டு வரமாட்டேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.


Sabarimala Temple : பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு...!


Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை: 17 ஆயிரம் புள்ளிகளில் நிஃப்டி...அச்சத்தில் முதலீட்டாளர்கள்...!


அதன்பின் சதாம் உசேனின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சதாம் உசேனின் அண்ணன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வலு கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி முதல் உதவி சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்தம் சொட்ட சொட்ட மது போதையில் அரசு மதுபான கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண