தென் மாவட்டங்களில் அதிக மாணவிகள் பயிலும் பெண் கல்லூரி மதுரை மீனாட்சி அரசுக் கலைக் கல்லூரியாகும். இங்கு 15க்கும் மேற்பட்ட துறைகளுடன் இளங்கலை, முதுகலை, ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. 4800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரில் மாணவிகளுக்கு சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களும் கற்பிக்கப்படுகிறது. கல்லூரி மிகப்பெரும் வளாகமாக இருக்கும் சூழலில் இங்கு ஏகப்பட்ட மரங்கள் உள்ளன.

 





அதே போல் டன் கணக்கில் இதர குப்பைகளும் சேர்கின்றன. இந்நிலையில் இதனை சரி செய்து குப்பைகளை தரம் பிரித்து தூய்மையான வளாகமாக மாற்ற வேண்டும் என மாணவிகள் பசுமைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் யெங் இந்தியா அமைப்பும், கிளைமேட் சேஞ் மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து செயல்படுகின்றனர். சமூக ஆர்வலர்கள் பொன் குமார், சரவணன் மற்றும் கல்லூரி பேராசியர்கள் சூரியகாந்தி, பாலமுருகேஸ்வரி, பியூலா, செல்வவீரகுமார்  உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



 

மேலும் இது குறித்து கல்லூரி முதல்வர் வானதி கூறுகையில்," கல்லூரியை தூய்மையான, பசுமையான வளாகமாக முன்னெடுக்க புதிய முயற்சியை எடுத்துள்ளோம். அதற்காக சமூக ஆர்வலர்களுடன் இணைந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தூய்மைப் பணி செய்துவருகின்றனர். 10-க்கு 20 என்ற அளவில்  இரண்டு குழியில் மக்கும் குப்பைகளை கொட்டி மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வெளியே கொண்டு செல்ல சேகரிக்கப்படும். வரும் 30 நாட்கள் தினமும் இந்த பணி தீவிரமாக நடைபெற்று தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட உள்ளது. எங்கள் கல்லூரி வளாகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து இந்த தூய்மை பணியில் ஈடுபட்டது பிரமாண்டமாக இருந்தது” என தெரிவித்தார்.




 

மேலும் சமூக ஆர்வலர் பொன் குமார்...,” தொடர்ந்து மதுரையில் இயற்கை சார்ந்த பணிகளை செய்து வருகிறோம். இந்நிலையில் மதுரையில் அரசு சார்ந்த அடையாளங்களில் ஒன்றான மீனாட்சி கல்லூரியில் மாஸ் லெவல் யூவெண்ட்டில் பங்கெடுப்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த நிகழ்வில் பணி செய்யும் மாணவிகளுக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும். பிற்காலத்தில் அவர்கள் நிறுவங்களில் பணி செய்யும் போது இது போன்ற அனுபவம் அவர்களை தனித்துவமாக உயர்த்தும்” என்றார்.