Sabarimala Temple : பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயில்:


கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று,  ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.


நடைதிறப்பு:


இதுதொடர்பான தேவஸ்தான அறிக்கையில், ”சபரிமலை கோயிலில் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஜெயராமன் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார். பின்னர், அன்றிலிருந்து 5 நாட்களுக்கு அதாவது 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகளுடன், பக்தர்களும் வழிபாட்டிற்கும் அனுமதிக்கப்பட உள்ளனர். இறுதியாக, 19ம் தேதி இரவு 10.30 மணிக்கு பூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு பூஜைகள்: 


தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும், பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடி ஏற்றி வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். 


இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் மபடிக்க


Chaithra Navarathri : அடுத்த வாரம் வரும் சைத்ர நவராத்திரி...என்ன செய்ய வேண்டும் தெரியுமா?


Lassi Tips : சம்மர் தொடங்கியாச்சு.. பெஸ்ட் லஸ்ஸி வேணுமா? சூப்பர் டிப்ஸ் இங்க இருக்கு..