Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்  59.58  அல்லது 0.10% புள்ளிகள் குறைந்து 58,178.27 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 28.10 அல்லது 0.016 % புள்ளிகள் குறைந்து 17,126.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  


லாபம்-நஷ்டம்


லார்சன், சிப்ளா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், பிரிட்டானியா, பிபிசிஎல், ஐடிசி, நெஸ்டீலே, இன்போசிஸ், ஹின்டல்கோ, விப்ரோ, சன் பார்மா, ஓஎன்ஜிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்சிஎல் டெக், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா, கிராசிம், பஜாஜ் மகேந்திரா, அப்போலா மருத்துவமனை, மாருதி சுசிகி, டெக் மகேந்திரா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, யுபிஎல், எஸ்பி, ஹிரோ மோட்டோகோர்ப், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் மூடப்பட்டதை அடுத்து, இந்திய பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டன.  இந்திய பங்குச்சந்தை கடந்த 3 மாதங்களில் இல்லாத சரிவை நேற்று கண்டது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1.52 சதவீத சரிவை கண்டது. சென்செக்ஸில் உள்ள 30 நிறுவன பங்குகளில் 29 நிறுவன பங்குகள் சரிவை கண்டன. இதேபோல நிஃப்டியும் 1.49 சதவீத சரிவை கண்டது. 


குறிப்பாக சிலிக்கான் வேலி வங்கி மூடலின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் இந்திய வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித் வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை சரிந்துள்ளது. 


ரூபாய் மதிப்பு:






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து 82.27 ஆக  உள்ளது.