என் மண் - என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த பயணத்தின் தொடர்ச்சியாக நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள நான்கு முக்கு பகுதியில் பெண் ஒருவர் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு பெரியகடை வீதி பகுதியில் கீழே கிடந்தது மனு அளித்த பெண்ணுக்கு பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நடைபயணம்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை 7-ம் நாள் பயணமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் பாதையாத்திரை பயணத்தை மேற்கொண்டார் அண்ணாமலையின் பாதையாத்திரை பயணத்தில்அவரோடு வந்திருந்த நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்களோடு நடை பயணம் செய்யும்பொழுது கடைசியாக வந்த பாஜக பிரமுகர்கள் சிலர் மக்களை கவரும் வகையில் சாலையில் கிடக்கும் குப்பைகளை ஒரு பையில் சேகரித்து எடுத்து வந்தனர்.
சாலையோரம் நின்ற சிலர் அண்ணாமலையோடு செல்பி எடுத்துக் கொள்வதும் பலர் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் மனுக்களையும் வழங்கினார்கள். அதுசமயம் திருப்பத்தூர் தாய்வீடு மகளிர் குழுவைச் சேர்ந்த ரமா என்பவர் அண்ணாமலையிடம் மகளிர் குழுக்களின் பிரச்சனைகள் குறித்தும் தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்டுவதற்கு வழி இல்லாமல் இருக்கிறோம் குழுகடன்களை ரத்து செய்வதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். ஆனால் அந்த மனு சிறிது நேரத்திலேயே பெரிய கடைவீதி சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Annamalai: ”சிறுபான்மை என்றால் சிறுமை என்று அர்த்தம் இல்லை; அரசியல் புரிதல் இல்லை” - அண்ணாமலை அதிரடி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்