மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த  தும்மக்குண்டு  என்ற கிராமத்தில் மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம் சௌந்தர் ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசைப் போட்டி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.,






ஒலிபெருக்கி அமைப்பாளர்கள்:

 

இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100 -க்கும் அதிகமான ஒலிப்பெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூம்பு  வடிவ ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.,

 


 



இரு தரப்பினரில் யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர். மூன்று சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெரும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வரும் 22 -ம் தேதி வணிக வரி மற்றும் பத்திரிப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.,

 




 

டி.எம்.எஸ் நூற்றாண்டு விழா:


நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க கோரும் விதமாக இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டி.எம்.எஸ்-ன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமர்சையாக இந்த போட்டி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.,

 

இது குறித்து ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில்...,” உசிலம்பட்டி பகுதியில் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு அதிக முக்கியதுவம் இருக்கும். சுப நிகழ்ச்சிகள் மற்றும் கருமாதி என்றாலும் எங்களுக்கு வேலை இருக்கும். ரேடியா செட் பாடல்களை விரும்பி கேட்பார்கள். இப்படி இருக்கும் எங்களுக்கு போட்டிகள் நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற போட்டிகள் எல்லா இடங்களிலும் நடத்த வேண்டும்” என தெரிவித்தனர்.




 


 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண