திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டல் முன்பு கடந்த 17ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்ட நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.




அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட இருந்தது. இதை அடுத்து மயக்கமடைந்து கிடந்தவர் திண்டுக்கல் பெரியகோட்டை அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 65 என்று கூறி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!




இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த அந்த முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட முதியவர் பழனிச்சாமி என்று பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை ஒப்படைத்தனர். குடும்பத்தினரும் உடலைப் பெற்றுக் கொண்டு பாறை பட்டியில் உள்ள சுடுகாட்டில் அனைத்து சடங்குகளையும் செய்து புதைத்தனர்.


ஐதராபாத் நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ! ₹149.10 கோடி நகை மற்றும் ₹1.96 கோடி பணம் பறிமுதல்!




போட்டோ ஆதாரத்துடன் திருமணத்தை நிரூபித்த பூர்ணா... தொடர்ந்து நடிப்பேன் என உறுதி


இதனிடையே நேற்று இரவு இறந்ததாக புதைக்கப்பட்ட பழனிச்சாமி வீடு திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பழனிச்சாமி கடந்த சில தினங்களாக வீட்டை விட்டுச் சென்றவர் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பி உள்ளார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் உயிருடன் திரும்பி வந்த பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்களை விசாரணைக்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இறந்ததாக கூறப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண