கடந்த திங்கள் கிழமை ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசதிலால் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இயக்குநர்கள் சுகேஷ் குப்தா மற்றும் அனுராக் குப்தா ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ₹149.10 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்ததாகவும், ₹1.96 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதாகவும் அமலாக்க இயக்குனரகம் (ED) தெரிவித்துள்ளது.




அந்நிய செலாவணி மற்றும் போதுமான டெபாசிட் தொகை இல்லாமல் தங்க கட்டிகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக  கூறி எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசதிலால் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்ஸ், இந்தியா பிரைவேட் லிமிடெட்  ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.பொதுத்துறை நிறுவனத்தை மோசடி செய்ததாக சுகேஷ் குப்தா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு எதிராக, ஹைதராபாத்தில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் விசாரணை  நடத்தப்பட்டது.   சம்பந்தப்பட்ட எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசாதிலால் ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இதன் இயக்குனர்கள் சுகேஷ் குப்தா, அனுராக் குப்தா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் உட்பட 5 இடங்களில் கடந்த 17ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.




இந்த வழக்கில் சுகேஷ் குப்தாவை கடந்த செவ்வாய்கிழமை அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.. சுகேஷ் குப்தா, MMTC ஜூவல்லர்ஸில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளின் உதவியுடன் அந்நிய செலாவணி பாதுகாப்பு இல்லாமல் மற்றும் போதுமான பாதுகாப்பு வைப்பு இல்லாமல் தங்க கட்டிகளை அதிகரித்து வந்தது முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.இதனால் பொதுத்துறை நிறுவனத்திற்கு ₹504.34 கோடி அளவுக்கு பொதுப் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சுகேஷ் குப்தா உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசதிலால் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இயக்குநர்கள் சுகேஷ் குப்தா மற்றும் அனுராக் குப்தாவிற்கு சொந்தமான ஐந்து இடங்களில் நடந்த சோதனை  முடிவில் மொத்தம் ₹149.10 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்ததாகவும், ₹1.96 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.