டோலிவுட் மற்றும் மாலிவூட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூர்ணா தன்னை திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்த ஒரு  கும்பலை போலீஸில் புகார் அளித்து சிக்க வைத்துள்ளார். 


 



தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை பூர்ணா தமிழ் சினிமாவில் துரோகி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, காப்பான், கந்தக்கோட்டை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களை வெகு சிறப்பாக நடிப்பவர். மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் மூலம் தனது அபாரமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டினார். தற்போது வெப் தொடர்கள் மற்றும் டிவி ஷோக்களில் கவனம் செலுத்தி வரும் பூர்ணாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. 


 






 


வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பூர்ணா :



இந்த நிலையில் நடிகை பூர்ணாவின் திருமணம் நின்று போய்விட்டது என கூறி சில வதந்திகள் பரவி வந்தன. அதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் நடிகை பூர்ணா. 
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபரான ஜே பி எஸ் குரூப் ஆப் கம்பெனியின் நிறுவனர் மற்றும் தனது நீண்ட கால நண்பரான ஷானித் ஆசிப் என்பவருக்கும் நடிகை பூர்ணாவிற்கும் கடந்த மே மாதம் 31ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று ஜூன் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது கணவருடன் துபாயில் வசிக்கும் பூர்ணா தன்னை திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்த கும்பலை போலீஸில் சிக்க வைத்துள்ளார். 


 







என் திரை பயணம் தொடரும்:


பூர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 23ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை, கேரளா, ஐதராபாத்திலும் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தனது நீண்ட நாள் கனவான நடன பள்ளியை விரைவில் துபாயில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் நடிகை பூர்ணா.