மதுரை - கோவை பயணிகள் ரயில் மதுரை இறக்கிவிட்ட பின் காலி ரயில் பெட்டி யார்டில் நிறுத்த முயன்றபோது தடம்புரண்டது.
மதுரை - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் இன்று இரவு 8 15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர் பயணிகளை முழுவதுமாக இறக்கிவிட்டு ரயில் பெட்டிகளுடன் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க சென்றபோது கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது. இதனையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டியை கழற்றி விட்டு மற்ற காலி பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்ட ரயில்வே துறையினர் பெட்டியை யார்ட் பகுதியிலிருந்து ரயில் பெட்டி பராமரிப்பு பகுதிக்கு எடுத்துசென்றனர். தொடர்ந்து இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: ”அவர் கண்டிப்பாக போலிச் சாமியாராகத்தான் இருக்க வேண்டும்” - உதயநிதிக்கு சப்போர்ட் செய்த அண்ணாமலை
மதுரையில் சில தினங்களுக்கு முன்பு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது ரயில் பெட்டி திடீரென தடம் புரண்டுள்ளது, மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயிலானது கண்ணூர் - பெங்களூரு இணைப்பு ரயில் என்பதால் தற்பொழுது அந்த ஒரு ரயில் பெட்டியை தவிர மற்ற பெட்டிகளுடன் ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளுடன் புறப்பட்டது. தற்போது ரயில் பெட்டி தடம் புரண்ட பகுதி என்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் தீ விபத்து ஏற்பட்ட பகுதி என்பது குறிப்பிடதக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் முன்பு பட்டாசு வெடிக்கத் தடை - காவல்துறை உத்தரவு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: சிறுசேமிப்பு திட்டம் என கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: 30க்கும் மேற்பட்டோர் புகார் !