மதுரை விமானநிலையத்தில் பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு
நல்லது தான். அப்போதுதான் பாஜக வளரும். கலைஞர் இருந்தால் கூட சமமாக கையாண்டு விடுவார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார். மேலும் தமிழ் காப்பியங்களுக்கு அவர் உரை எழுதுவார். அரசியலில் ஒரு பால்ட் லைன் உருவானால் தான் புதிய கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும். விழுப்புரம் மோடியின் திட்டங்கள் மறுபடியும் பாஜகவின் தனித்துவத்தை தாண்டி உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு பாஜகவின் வளர்ச்சி அதிகம். சனாதனத்திற்கு எதிராக ஆதரவாகவும் எதுவும் பேசாமல் வெறும் பேச்சாக மட்டும் இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் அதை பார்ப்பீர்கள்.
அமைச்சரின் தலைக்கு பரிசுத்தொகை அறிவிப்பது குறித்த கேள்விக்கு
அது தவறு தான். அப்படி ஒருவரின் தலைக்கு பரிசுத்தொகை நிர்ணயிக்கிறார் என்றால் அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்று அர்த்தம். சனாதனத்தை பின்பற்றுகிறேன், ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்க வேண்டும். இதை வன்மையாக கண்டிப்பது மட்டுமல்ல இது ஏற்புடையதல்ல. தலைக்கு விலை வைப்பதற்கு யார் அவர். வெளியூரிலிருந்து வந்து யாருக்கு விலை வைப்பது.
சினிமா மூலம் அரசியல் பேசுவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து குறித்த கேள்விக்கு
ஜாதிய வன்மங்கள் கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகத்தில் வருகிறது. சினிமாவில் என்ன கருத்துக்களை சொல்கின்றோம் என்பது முக்கியம். முக்கியமான கருத்துக்கள் சினிமா மூலம் சொல்ல வேண்டும் அதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடப்பதற்கு சினிமாவே காரணமாகிவிடுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு
அதற்கான ஒரு வரைமுறை உள்ளது. தற்போது அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. 1952 இல் இருந்து 67 வரை நாலு முறை ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற்றுள்ளது. இது பாஜகவின் கொள்கை முடிவு தான். ஆனாலும் கூட உடனடியாக கொண்டு வர முடியாது.
பாரத் பெயரும் மாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு
அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும் பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார். இல்லாத பிரச்னையை எதிர்க்கட்சியினர் உருவாக்குகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்றது தான் செய்கிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. பாரதம் என்கிற வார்த்தை இந்தியாவை அழகாக நுட்பமாக காட்டுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தொகுதி மக்களிடம் செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ; தொண்டர்கள் பெருமிதம்
மேலும் செய்திகள் படிக்க - ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி குளறுபடி..! சம்பவ இடத்திற்கு சென்ற கமிஷனர்..! அடுத்த நடவடிக்கை என்ன ?