பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Virat Kohli Century: தொடங்கியது ரன்மெஷின் வேட்டை... புத்தாண்டை சதத்துடன் தொடங்கிய கோலி...! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..!


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை சார்பில் பழனியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


Thunivu: அஜித் ரசிகர்களுக்கு ஷாக்... துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி ரத்து! முழு விபரம்!




தெய்வத்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மணியரசன் தெரிவித்ததாவது:- பழனி மலைக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தில் வேள்வி யாகம் நடத்தும் பிராமணர்களுக்கு சமமான எண்ணிக்கையில் தமிழ் ஓதுவார்களையும் நியமித்து தமிழிலேயே கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், கோவில் கருவறை, மூலவர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றிலும் தமிழ் ஓதுவார்கள் புனித தீர்த்தத்தை ஊற்றி தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  


அரசு எழுதிக் கொடுப்பதில் புள்ளி, கமாவை கூட ஆளுநர் மாற்ற முடியாது - முன்னாள் மக்களவை செயலாளர் கருத்து


IND vs SL 1st ODI Score Live: இலங்கைக்கு இமாலய இலக்கு... 374 ரன்களை எட்டிப்படிக்குமா...?


மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20ம் தேதி பழனியில் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் தமிழ் ஆர்வலர்கள்  கலந்து கொள்வார்கள் அறிவித்தார்‌. ஆலோசனைக் கூட்டத்தின் போது வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், பதினென் சித்தர் பீட சித்தர் மூங்கிலடியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண