தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு, குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

Continues below advertisement

CM Stalin: சாதி மதம் என மக்களைப் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..!

Continues below advertisement

மேலும் கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர். மேலும்  கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த் நிலையில்  இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள் காட்டுமாடு சிறுத்தை அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன.

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில், அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கை.. குறைந்த விமானங்கள்..

கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யும்போது நீர்வரத்து இருக்கும் கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த மாதம் 27, 28-ந் தேதிகளில் கனமழை பெய்ததுஇதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதன்காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

TN Rain Alert : அடுத்த 5 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்காம்.. உஷார் மக்களே.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Sadhguru : சத்குருவின் சிறப்பு கட்டுரை: 'நகரத்திற்கு புலம்பெயரும் மக்களை தடுக்க இதுதான் ஒரே வழி..' : தீர்வை சொன்ன சத்குரு..!

இந்தநிலையில் நேற்று மதியத்திற்கு மேல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். ஒருவாரத்திற்கு பிறகு குளிக்க அனுமதி அளித்ததால் கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண