தமிழக, கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பெளர்ணமி  திருவிழா நடந்தது. இரு மாநிலங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலைஉச்சியில் பிரசித்திபெற்ற மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக,கேரள மாநில எல்லையில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.


The Kerala Story Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை கதையா? தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!




அதன்படி, சித்ரா பெளர்ணமி  நாளான நேற்று கண்ணகி கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இந்த திருவிழாவுக்காக கோவில் வளாகத்தில் இருந்த முட்புதர்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டு, கோவில் வளாகம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5 மணியளவில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மலர் வழிபாடு, பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.


Chennai Airport : சென்னை விமான நிலையத்தில், அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கை.. குறைந்த விமானங்கள்..




ஆண்டுக்கு சித்ரா பெளர்ணமி  அன்று ஒருநாள் மட்டுமே, அதுவும் இந்த திருவிழாவுக்காக மட்டுமே கண்ணகி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நேற்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, சென்னை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணகி கோவிலில் குவிந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் தமிழக,கேரள எல்லையான குமுளியில் இருந்து ஜீப்களில் கண்ணகி கோவிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.


TN Rain Alert : அடுத்த 5 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்காம்.. உஷார் மக்களே.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!


இதற்காக 500-க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயக்கப்பட்டன. மலைப்பகுதியில் கோவிலை நோக்கி ஜீப்கள் அணிவகுத்து சென்றன. மேலும், கூடலூரை அடுத்த பளியன்குடியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பளியன்குடி மலைப்பகுதி வழியாக பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்றனர். அதேபோன்று குமுளியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு நடந்து வந்தனர்.




கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு குங்குமம், துளசி, விபூதி, பழங்கள் மற்றும் பெண்களுக்கு வளையல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. கோவிலுக்கு வெளியில் டிராக்டர்களில் உணவு எடுத்து வரப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் பூமாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண