திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நட்சத்திர ஏரி. கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம். கொடைக்கானலில் இதய பகுதியாக இருக்கக்கூடிய ஏரி எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய பகுதியாகும். இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை பகுதியான புதுப்புத்தூர் பகுதியில் இருந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக குடும்பத்தினருடன் காளிமுத்து மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஆறு பேர் வந்துள்ளனர்.


Kuwait Fire Accident: தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு: குவைத் விரையும் இந்திய வெளியுறவுத்துறை




பரிசோதனை முடிந்த பிறகு மருத்துவ அறிக்கை கிடைப்பதற்கு சிறிது நேரம் ஆகும் என்று மருத்துவமனையில் கூறியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் காத்திருக்காமல் ஏரி சாலையில் பொழுதைக் கழிக்க வந்த காளிமுத்து மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் அவர்களுடன் வந்த பெண்களை  மட்டும் இறக்கி விட்டு ஏரி சாலையில் வாகனத்தை வேகமாக இயக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அப்பொழுது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை இடித்து கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் வாகனம் பறந்து விழுந்துள்ளது. இதில் சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு வாகனம் ஏரியில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.


Breaking News LIVE: ஜம்மு காஷ்மீர் : கண்டி வனப்பகுதியில் பரவிய தீ.. பரபர வீடியோ காட்சிகள்




Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!


வாகனத்தில் இருந்த ஜெயபிரகாஷ் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வாகனத்தில் இருந்த பொருட்களையும் ஜேசிபி வாகனத்தை வைத்து ஏரிக்குள் விழுந்த வாகனத்தை மீட்டனர். வாகனம் பிடித்த இருசக்கர வாகனத்தில் அந்த பெண் படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஏரிக்குள் விழுந்த வாகனம் மீட்கப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜெயபிரகாஷ் மற்றும் காளிமுத்து உடன் வந்த வந்த இரண்டு பெண்கள் கர்ப்பிணி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.