அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்கி தமிழில் திருமுறை பாடல்கள் பாடி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷங்கள் முழங்கி வழிபாடு செய்தனர்.


Thaipusam 2023: அரோகரா.. அரோகரா.. உலக முருக கோயில்களில் கோலாகலம்.. பரவசமாய் குவியும் பக்தர்கள்..!


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வராக நதி ஆற்றங்கரையோரத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் சோழப் பேரரசின் வாரிசான ராஜேந்திர சோழீஸ்வரரால் கட்டி முடிக்கப்பட்டது. அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் மூலவரான பாலசுப்பிரமணியம் உற்சவராக முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்து அருள் பாலிப்பது இக்கோவிலில் சிறப்பம்சமாகும்.


Breaking News LIVE: விரைவில் மாதாந்திர மின்கட்டணம் மீண்டும் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி


இன்று முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் தைப்பூசத் திருநாள் பெருவிழா பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பெரியகுளத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலிலும் அதிகாலை முதலே தைத்திருநாளை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் கூடி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


T. P. Gajendran Passes Away: பெரும் சோகம்.. இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான டி. பி. கஜேந்திரன் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!


முன்னதாக மூலவரான பாலசுப்ரமணியனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய உற்சவர் சிலைக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கி தமிழில் திருமுறை பாடல்கள் பாடி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


Thaipusam 2023:பெருநகரில் கூடிய பக்தர்கள்... தைப்பூசப் பெருவிழாவான இன்று இங்கு என்ன நடக்கும் தெரியுமா?


இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்கி தைப்பூசத் திருநாளில் எழுந்தருளிய முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டுச் சென்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண