Breaking News LIVE: திருப்பூரில் அரசுப்பேருந்து கார் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பரிதாப பலி..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ஆர்த்தி Last Updated: 05 Feb 2023 07:29 PM
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக - விஜயகாந்த்

பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவராணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கார் அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி..!

திருப்பூர் ஓலப்பாளையம் அருகே அரசுப்பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் காரில் பயணித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை குறைவு

குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை குறைவு 

Petrol : சென்னையில் 260 நாளாக பெட்ரோல் விலை மாற்றமில்லாமல், ரூ.102.60 ரூபாய்க்கு விற்பனை

Petrol : சென்னையில் 260 நாளாக பெட்ரோல் விலை மாற்றமில்லாமல், ரூ.102.60 ரூபாய்க்கு விற்பனை 

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்..!

நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

துர்கா ஸ்டாலின் சகோதரி காலமானார்..

துர்கா ஸ்டாலின் சகோதரி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் திருமதி வாணிஜெயராம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆணை  

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் திருமதி வாணிஜெயராம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆணை


 
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக  விளங்கிய பின்னணிப் பாடகி திருமதி வாணிஜெயராம் அவர்கள் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திருமதி வாணிஜெயராம் அவர்களின் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.


 

Chengalpattu Gang Rape : நண்பன் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம்

Chengalpattu Gang Rape : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம், பாதிக்கப்பட்ட இளம் பெண் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.


 செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பெண்ணை கடத்தி சென்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகார்.

தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்

தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்

Thaipoosam : வடபழனியில் தைப்பூச விழா கோலாகலம்

Thaipoosam : வடபழனியில் தைப்பூச விழா கோலாகலம்

கேரள பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, முதல்வர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம்

விரைவில் மாதாந்திர மின்கட்டணம் மீண்டும் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

விரைவில் மாதாந்திர மின்கட்டணம் மீண்டும் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

திருப்பூர் : ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர் : ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

T. P. Gajendran Passes Away: பெரும் சோகம்.. இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான டி. பி. கஜேந்திரன் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!

T. P. Gajendran Passes Away: பெரும் சோகம்.. இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான டி. பி. கஜேந்திரன் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 260வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ஆம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 


இன்றைய விலை


இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 260வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.


அதன்படி இன்று (பிப்ரவரி.05) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூற்று ஐம்பது நாள்களை கடந்துள்ளது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.