ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜன.29ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார்.
Thaipusam 2023: அரோகரா.. அரோகரா.. உலக முருக கோயில்களில் கோலாகலம்.. பரவசமாய் குவியும் பக்தர்கள்..!
மண்டபம் எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு முன்பாக பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. மங்கலநாணுக்கு பூஜைகள் நடைபெற்ற பின் மங்கலநாண் அணிவித்தல் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மங்கலபிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று தைப்பூச நாளை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று நிறைவு பெற்றது.
இந்நிலையில் 8-ஆம் நாள் திருவிழாவான இன்று பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலில் குவிந்துள்ளனர். இன்று அதிகாலை மூன்றுமணிமுதல் தற்போது வரை 1 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளனர். கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் பழனி அடிவாரம் பகுதியில் இருந்து பக்தர்கள் தடுப்புகள் வைத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்