27.10.2024 - மருதுபாண்டியர் நினைவுநாள் விழா மற்றும் 29.10.2024, 30.10.2024 - பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகளாரின் ஜெயந்தி- குருபூஜையினையொட்டி மூன்று தினங்கள் மதுபானக் கடைகள் அடைப்பு என மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முதல் கட்ட அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளார்.



 



மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு


”27.10.2014 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர், நினைவுதினத்தை முன்னிட்டும், 29.10.2024, 30.10.2024 ஆகிய நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினவிழாவை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.204 (மாலை 07.00 மணி வரை மட்டும்). மற்றும் 29.10.2024, 30.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் (FL1/FL2/FL3/FL3A/FL4A/FL11) ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், படைவீரர்கள் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினங்களில் மது விற்பனை தொடர்பான விதி மீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது”. எனவும்.


- “தொப்புள்கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


 

அதே போல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட செய்தி குறிப்பில்

 


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்துார் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7571, 7740, 7573), மானாமதுரை பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்: 7541, 7542, 7544, 7669, 7663, 7680, 7736) மற்றும் எப்.எல்.2.தி/ள். கிங்ஸ் ரெக்கிரியேஷன் கிளப்,  திருப்புவனம் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்: 7674, 7675, 7547, 7682 மற்றும் 7670) மற்றும் தி/ள் ஸ்டார் ரெக்கிரியேஷன் கிளப், தி/ள் வைகை ஸ்போர்ட்ஸ் கிளப், மடப்புரம், திருப்பாச்சேத்தி அரசு மதுபானக்கடை எண்: 7664, பூவந்தி அரசு மதுபானக்கடை எண்: 7615, சிவகங்கை டவுன் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்: 7514.7552.7556,7577 மற்றும் 7714) மற்றும் 7 ஸ்டார் விளையாட்டு நற்பணி மன்றம், நேரு பஜார், சிவகங்கை, மதகுபட்டி பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் (மதுபானக்கடை எண்:7703,7705) ஆகிய மதுபானக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக 23.10.2024 அன்று மாலை 06.00 மணி முதல் 24.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும்”  என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் முதற்கட்ட என்பதால் அடுத்த நாட்களுக்கு ஆட்சியர் தகவல் வெளியிட உள்ளார்.