யூடியூபர் இர்பான் கடந்த வாரம் சமூகவலைதளத்தில் தனது குழந்தையின் தொப்புக்கொடியை அறுத்து அதனை வீடியோவாக வெளியிட்டது கண்டிக்கதக்கது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்

 







மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப்  பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. செள. சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. வெங்கடேசன (சோழவன்தான்), மு. பூமிநாதன்( மதுரை தெற்கு ), அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு. அருள் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் கேள்விக்கு...,” இர்பான் அறுவை அரங்கிற்குள் சென்று மருத்துவர் அல்லாத ஒருவர் தொப்புள்கொடியை அறுத்தது தேசிய மருத்துவ சட்ட விதிகளை மீறியது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்படி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.

 


 

யூடியூபர் இர்பான் மீது புகார் அளித்துள்ளோம்

 

செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் இர்பான் மீது புகார் அளித்துள்ளோம். தொப்புள் கொடியை அறுக்க அனுமதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் தரப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவ இயக்குனரத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் பயிற்சி செய்வது தடை விதிக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இர்பான் மீது புகார் அளித்துள்ளோம், காவல்துறை மூலம் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இர்பான் மனைவிக்கு ஸ்கேன் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் தமிழகத்தில் மட்டும் தான் தடை  துபாயில் சென்று எடுத்ததால் மன்னிப்பு கேட்டதால் அதனை ஏற்றுக்கொண்டோம்.

 

இர்பான் அரசியல் பிண்ணனி உள்ளதால் நடவடிக்கை எடுக்க தயக்கமா? என்ற கேள்விக்கு 







 

தவறு செய்தவர்களை இந்த அரசு காப்பாற்ற முனையாது. துபாயில் இர்பானின் மனைவிக்கு ஸ்கேன் எடுத்தாலும் பாலினம் குறித்து வெளிவிட்டது தவறு. அது இங்கு நடக்கவில்லை துபாயில் நடந்தது என்பதால் மன்னிப்பு கேட்டார். அதனால் நடவடிக்கை இல்லை இங்கு செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். தொப்புள்கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் சுகாதாரத்துறை விடமாட்டோம்” என்றார்.