அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்க இருப்பதாக கடந்த சில நாட்கள் முன்பாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக. அதன்படி 2025 இல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதை ஒருங்கிணைப்பதற்கு விளம்பரதாரர்களும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அஜித்தின் ரேஸிங் அணியின் லோகோவை நடிகர் அஜித் வெளியிட்டுள்ளார். அஜித் குமார் ரேஸிங் என்று தனது அணிக்கு அவர் பெயர் வைத்துள்ளார். இந்த அணியின் உரிமையாளர் மற்றும் லீட் ரேஸராக அஜித் இருப்பார். 2025 ஆம் ஆண்டும் துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H ரேஸில் அஜித் தலைமையில் அவரது அணி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கினார். ப்ரோ-கார்ட்ஸில் தீவிர பயிற்சித் திட்டங்களைப் பதிவுசெய்து, அவர் வெற்றிகரமான பங்கேற்பைத் தொடர்ந்துதேசிய பந்தய சாம்பியன்ஷிப், பின்னர் அவர் ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அரங்கிற்கு முன்னேறினார் - டொனிங்டன் பார்க் மற்றும் நாக்ஹில் சர்க்யூட்களில் போடியம் முடித்த பிறகு FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் செய்தார்.
விடாமுயற்சி . குட் பேட் அக்லி
அஜித் நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.