மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், இந்திய மல்யுத்த வீரர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் 2012ஆம் ஆண்டு தன்னை எப்படி துன்புறுத்த முயன்றார் என்று விவரித்துள்ளார்.


பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்:


2016 ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தனது சுயசரிதையை‘விட்னஸ்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ஒருவருடன் இணைந்து எழுதியுள்ளார். அதில், இந்திய மல்யுத்த வீரர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் 2012ஆம் ஆண்டு தன்னை எப்படி துன்புறுத்த முயன்றார் என்று விவரித்துள்ளார்.


2012 ஆம் ஆண்டு அல்மாட்டியில் (கஜகஸ்தான்) நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் கூறுகையில்,"அப்போது மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், தனது ஹோட்டல் அறையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றார். பிரிஜ் பூஷன் சிங் என்னை என் பெற்றோருடன் போனில் பேச வைத்தார். அது பாதிப்பில்லாததாகத் தோன்றியது. எனது போட்டி மற்றும் பதக்கம் பற்றி அவர்களிடம் பேசியபோது, ​​ஒருவேளை விரும்பத்தகாத எதுவும் நடக்கக்கூடாது என்று நினைத்தேன்.


ஆனால் நான் அழைப்பை முடித்தவுடன், அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவருடைய படுக்கையில் அமர்ந்திருந்தபோது அவரைத் தள்ளிவிட்டு அழ ஆரம்பித்தேன்.


சிறுவயதிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்:


அதற்குப் பிறகு அவர் பின்வாங்கினார். நான் அவர் விரும்பியதைச் செய்யப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார் என்று நினைக்கிறேன். அவர் என்னைச் சுற்றி 'பாப்பா ஜெயிஸ்' (ஒரு தந்தை செய்வது போல்) என்று சொல்லத் தொடங்கினார். ஆனால் அது அப்படியல்ல என்று எனக்குத் தெரியும்."என்று கூறியுள்ளார்.


அதேபோல், சிறுவயதில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். அதில், சிறுவயதில் நானும் துன்புறுத்தப்பட்டேன், ஆனால் அது என் தவறு என்று நான் நினைத்ததால் அதை என் குடும்பத்தினரிடம் சொல்ல முடியவில்லை. எனது டியூஷன் ஆசிரியர் என்னைத் துன்புறுத்துவார். அவர் என்னை வகுப்புகளுக்கு அவரது இடத்திற்கு அழைப்பார்.பின்னர் இது குறித்து என் தாயரிடம் சொன்னேன்"என்று கூறியுள்ளார்.


முன்னதாக,இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை கோரியும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகியோர் அடங்கிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குழு தலைநகர் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது. நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி போ


லீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரில் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த சூழலில் அண்மையில் முடிந்த ஹரியானா மாநில தேர்தலுக்கு முன்னதாக வினேஷ் மற்றும் பஜ்ரங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதில் தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத், சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.