திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் தாக்கல் செய்த மனு, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்த காவல்துறை தன்னை கடுமையாக தாக்கினர். அப்போது தன்னுடைய 4 நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில் தான் மட்டுமன்றி விசாரணை கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார். அதைத் தொடர்ந்து தன்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்க கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.




இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து ஒப்படைக்க வேண்டும், அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகியும் அரசுத்தரப்பில் தற்போது வரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இது உச்சநீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என வாதிடப்பட்டது. தொடர்ந்து அரசுத்தரப்பில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karthik Subbaraj : நான் எதிர்பார்க்காததை யானைகள் செய்தன - ஜிகர்தண்டா டபுள் எகஸ் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு எதிராக வட்டச்செயலாளர்கள் போர்க்கொடி..! மீண்டும் வெடிக்கும் போர்..!