தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுலாதலமாக அமைந்துள்ளது சுருளி அருவி. பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் இந்த அருவியில், ஆனந்த குளியலிடும்போது வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பார்கள் அருவிக்கு சென்று திரும்புபவர்கள். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிக்குள் 30 அடி உயரம் கொண்ட இந்த அருவி வனப்பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் மூலம் அருவியாக உருவெடுத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும், விளங்குவது சுருளி அருவி. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்வதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வந்து செல்வது வழக்கம். சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசி பாறை பகுதிகளில் உள்ள ஊற்று நீர் மற்றும் ஹைவேஸ் அணைப்பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் சுருளி அருவியில் அருவியாய் வந்து கொட்டுகிறது.
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கோடை வெயில் அதிகமாக காணப்பட்டது. மேலும் மழை இல்லாமல் இருந்த காரணத்தினால் சுருளி அருவியில் நீர் வரத்தின்றி இரண்டு மாதமாக வரண்ட நிலையில் சுருளி அருவி காட்சியளித்து வந்தது. இதனால் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருவியில் சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர் வரத்து பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவியில் இன்று நீர்வரத்து துவங்கியது.
இதனை அடுத்து விடுமுறை காலத்தில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குடும்பத்துடன் சுருளி அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர். அருவி நீர் வரத்து பகுதிகளில் மழையளவு அதிகமாக உள்ள காரணத்தினால் அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இன்று கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து உற்சாகமாக குளித்துவிட்டு செல்கின்றனர்.