Car Health Tips: உங்களது காரில் பெரிய பிரச்னைகளை உருவாக்கக் கூடிய, 7 முக்கிய அறிகுறிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
அதிகமாக வெப்பமடைதல்:
உங்கள் கார் அதிக வெப்பமடைகிறது என்றால், உடனடியாக நீங்கள் சர்வீஸ் சென்டருக்குச் சென்று வாகனத்தை பழுதுபார்த்துக் கொள்ள வேண்டும். குளிரூட்டும் அமைப்பில் காற்று அல்லது கேஸ்கெட் செயலிழப்பு போன்ற பல காரணங்களால் இது ஏற்படலாம். ஆரம்பத்தில் ஒரு சிறிய பிரச்னையாக இருக்கலாம், இது சரி செய்யப்படாவிட்டால் இன்ஜின் செயலிழப்பிற்கான முக்கிய புள்ளியாக மாறலாம். பெரும் செலவிற்கும் வழிவகுக்கலாம்.
எக்ஸாஸ்டரிலிருந்து புகை வெளியேறுதல்:
எக்ஸாஸ்டரிலிருந்து புகை வெளியேறுவது என்பது ஒரு கெட்ட செய்தி தான். வெள்ளைப் புகை வெளியேறினால் கூலண்ட் லீக் ஆக இருக்கலாம் அதோடு கூலண்ட் ஆனது இன்ஜினுக்குள் நுழைவதற்கான வாய்ப்பும் இருக்கலாம். மறுபுறம், கருப்பு புகை என்பது இயந்திரம் மிகவும் மோசமாக இயங்குகிறது அல்லது போதுமான காற்று எஞ்சினுக்குள் இடம்பெறவில்லை என்பதை காட்டுகிறது..
வார்னிங் லைட்ஸ்:
உங்கள் டேஷ்போர்டில் உள்ள எச்சரிக்கை விளக்குகள், உங்கள் காரில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை வெளிக்காட்ட உதவுகின்றன.
இந்த எச்சரிக்கை விளக்குகளை அவ்வப்போது கவனிப்பது ஒரு நல்ல நடைமுறையாகும். ஏனெனில் எச்சரிக்கை விளக்குகள் மூலம் உணர்த்தப்படும்போது அது சிறிய பிரச்னைகளாக இருக்கலாம். அதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் பெரிய தலைவலியாக மாறக்கூடும்.
ஸ்லிப்பிங் கிளட்ச்:
ஒரு காரின் கிளட்ச் ஒரு வழக்கமான தேய்மானம் மற்றும் அதன் நிலை என்பது, வழக்கமாக அந்த வாகனத்தை ஓட்டுபவரை சார்ந்தது. உங்கள் கிளட்ச் நழுவுவதை நீங்கள் கண்டால், அதை உடனடியாக மாற்றுவது அல்லது சரிபார்ப்பது நல்லது.
பாதிக்கப்பட்ட கிளட்சுகள் உடன் வாகனத்தை ஓட்டுவது எந்த சூழலிலும் நல்லது கிடையாது.
டயர்களில் சீரற்றதன்மை:
டயர்கள் ஒரு காரின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். வாகனத்தில் இருந்து சாலையுடன் தொடர்பு கொள்ளும் ஒரே பாகமும் ஆகும். எனவே, அவற்றின் நிலையை கவனித்துக்கொள்வது என்பது மிக முக்கியம். டயர்களில் சீரற்ற தேய்மானம் இருந்தால், அது மோசமான சஸ்பென்சன் அல்லது அலைன்மெண்ட் காரணமாக ஏற்படக்கூடும் என்பதால், அவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
பிரேக் சத்தம்:
பிரேக்குகள் ஒரு காரின் மற்றொரு மிக முக்கியமான அங்கமாகும். பிரேக்குகளில் இருந்து எந்தவிதமான சத்தம் எழுந்தாலும் அது ஆபத்தானது மற்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
சிதைந்த டிஸ்குகள், தேய்ந்து போன பேட்கள் அல்லது சிலிண்டர் சிக்கியிருப்பது பிரேக் சத்தத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதனை உடனடியாக சரிபார்க்க வேண்டும்.
சஸ்பென்ஷன் பாகங்களில் இருந்து சத்தம்:
சஸ்பென்ஷன் பாகங்களில் இருந்து வரும் சத்தம் என்பது, பாகங்கள் தேய்ந்துபோய் இருக்கலாம் என்பதற்கான வாய்ப்பை குறிக்கிறது. இவற்றை உடனடியாக கவனிக்காமல்விட்டால் அதிக சேதத்தை ஏற்படுத்தும். அவை காரின் மற்ற பாகங்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்துகின்றன மற்றும் சவாரி தரத்தை மோசமாக பாதிக்கின்றன.
Car loan Information:
Calculate Car Loan EMI