கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்கண்காட்சியைப் பார்வையிட்டு வரும் சுற்றுலா பயணிகள், காலையிலேயே பெய்த மழையால் மலர்களோடு மலர்களாக நனைந்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்..


மலைகளின் இளவரசியான கொடைக்கானல்


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த நிலையில் தற்போது கோடை விழா துவங்கி மூன்றாவது நாளாக மலர் கண்காட்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அவர்களின் பார்வைக்காக 20அடி நீள மயில், 10 அடி உயரம் கொண்ட சேவல், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், நெருப்பு கோழி உள்ளிட்ட உருவங்களை பூக்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன,


Anbe Sivam: ”நோ ரீ-ரிலீஸ்” - நல்லவேளை அன்பே சிவம் படம் ஓடல - நடிகை குஷ்பூ சொன்ன விளக்கம்!




மலர்கண்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள்


அதே போல பூக்களின் பெயர் பலகைகள், பூ தொட்டிகள், காளை மாடு, பூங்காவில் அலங்கார வளைவு, மலர் அலங்கார மேடை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. நேற்று முதல் துவங்கிய கோடை விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.


RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!


குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்


இதில் மூன்றாம் நாளான  இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள்  ரசித்து வருவதுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனிடையே காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென சுமார் ஒரு மணி நேரமாக பரவலாக நல்ல மழை பெய்ய தொடங்கியது. இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்த படியும், குடைகளை  பிடித்த படியும் இங்குள்ள மலர்களை ரசித்து வருகின்றனர்.


மேலும் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மேகக் கூட்டங்களை ரசித்தப்படியே படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.மேலும் கொடைக்கானலில்  தொடர்ந்து கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.