தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், பாம்பார்புரம்  மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால்  நண்பகல் 12 மணி முதல் அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவானதால் சுற்றுலா பயணிகள் அனைவரையும் வனத்துறையினர்  வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

Continues below advertisement

Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..

Continues below advertisement

மேலும்  சுற்றுலா பயணிகள் யாரையும் குளிக்க அனுமதிக்காமல் தடை விதித்தனர். இந்த நிலையில் அருவிக்கு வரும்  நீர்வரத்து சற்று குறைந்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிப்பதாக வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் காலை முதல் ஆர்ப்பரித்து கொட்டி வரும் அருவி நீரில் குளித்து மகிழ்கின்றனர். இதே போல் கம்பம் அருகே உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

விதிமீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு... விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் ?

சுருளி அருவிக்கு  நீர்வரத்து வரும் இரவங்கலாறு , மகாராஜா மெட்டு உள்ளிட்ட மேகமலை வனப்பகுதிகளில் அதிகமான மழை பொழிவு இருந்ததால சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்திருக்கிறதால் அருவியில் வரும் நீர் வரத்தில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இதேபோல காமயகவுண்டன் பட்டி அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படும் சண்முகாநதி அணை முற்றிலும் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்வது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு: நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்

52.5 அடி உயரம் கொண்ட இந்த சண்முகாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை , ஹைவேவிஸ் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. தற்போது மேகமலை மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் சண்முகாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் இன்று காலை அணையின் முழுகொள்ளவான 52.5 அடி எட்டி அணையில் இருந்து தண்ணீர்வெளியேறி மாறுகால் பாய்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், சீப்பாலக்கோட்டை, எரசக்கநாயக்கனூர், ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1640 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.