அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அம்மாவை விட அதிகமாக யோசித்து பொதுச் செயலாளர் நடவடிக்கை இருக்கும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். 

 

வங்கியில் வைக்கப்பட்ட தேவர் தங்கக் கவசம்

 

மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் தேவர் தங்கக் கவசத்தை அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள், மற்றும் பசும்பொன் தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் காந்தி மீனா ஆகியோர் இணைந்து வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்....,” தேவர் ஐயா பசும்பொன் தேவர் அவர்களுக்கு அதிமுகவினர் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 25ஆம் தேதி எடுக்கப்பட்டு மீண்டும் வங்கிக்கு பாதுகாப்பாக  பெட்டகத்தில் வைக்கப்பட்டது.. ( அப்போது பாங்க் ஆஃப் இந்தியா வங்கி எனக் கூறுவதற்கு பதிலாக ஐஓபி என தவறுதலாக கூறினார்.) பின்னர் முன்னாள் அமைச்சர்கள் சொன்னதை கேட்டு சரி செய்துகொண்டார்.

 


 

விஜய் மாநாடு குறித்து கடந்த 25 ஆம் தேதி கேட்டபோது மாநாடுக்குப் பிறகு கூறுகிறேன் என கூறினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு

 

தற்போது introduction முடிந்துள்ளது no comment என்றார்.

 

அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது தேர்தல் நேரத்தில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மீது ஜெயலலிதாவும் போல் நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடியார் என கேட்டதற்கு

 

உங்கள் வாயில் நல்ல வார்த்தையே வராதா என கூறினார். எல்லோரும் நல்லா தான் பணிபுரிகிறோம்..‌ அம்மாவை விட அதிகமாக யோசித்து பொதுச் செயலாளர்  நடவடிக்கை இருக்கு.. என்ன ட்விஸ்ட் வைத்தார்.