இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் தனது X தளத்தில் உறுதிபடுத்தாத தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள செக்கானூரணி சம்பவத்தில் நடைபெற்ற காரணம் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் அர்ஜுன் சம்பத் அந்த சம்பவத்திற்கான காரணத்தை தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக எதற்காக தவறான காரணத்தை பதிவிட்டார் என விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளோம், அவர் எந்த அடிப்படையில் பதிவிட்டார் என கூறி பதிவிட்டதை ஒத்துக்கொண்டால் அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக சென்னையில் இருப்பதால் வரும் 26ஆம் தேதி ஆஜராக அனுமதி வழங்க அர்ஜுன் சம்பத் சார்பில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 




மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தில் பால்பண்ணை உரிமையாளரான சுமதி என்பவரது வீட்டில் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உறவினர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தில், முதற்கட்ட தகவலாக பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக பாதிக்கப்பட்ட சுமதி தெரிவித்திருந்தார்., இந்நிலையில், நேரில் வந்து ஆய்வு செய்த தடயவியல் போலிசார், பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்து இந்த சம்பவம் தொடர்பாக சுமதியின் உறவினர் பாண்டி என்பவரை கைது செய்து போலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.,




இந்த சம்பவத்தை குறிப்பிட்டு உண்மை நிலை தெரியாமல் தமிழகத்தில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை போல் X வலைதளத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இன்று செக்காணூரணி காவல் நிலையத்தில் ஆஜராக விளக்கம் அளிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், அர்ஜூன் சம்பத்-க்கு சம்மன் அனுப்பியிருந்தார்., 




இந்நிலையில் இன்று பங்காரு அடிகளார் மறைவையடுத்து அவருக்கு மரியாதை செலுத்த அர்ஜூன் சம்பத் சென்னை சென்றுவிட்டதாகவும், வரும் 26ஆம் தேதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் சோலை கண்ணன், அர்ஜூன் சம்பத்-ன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர், தென்னிந்திய பார்வட் ப்ளாக் நிறுவனர் திருமாறன் உள்ளிட்டோர் செக்காணூரணி காவல் நிலையத்தில் ஆஜராக கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வரும் 26ஆம் தேதி அர்ஜூன் சம்பத் ஆஜராக வேண்டும் என போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது.,


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!