அர்ஜுன் சம்பத் X தளத்தில் உறுதிசெய்யப்படாத தவறான தகவலை பதிவிட்டது குறித்து விசாரிப்பதற்கு சம்மன் அளித்துள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் - மதுரை மாவட்ட எஸ்.பி., சிவ பிரசாத்.
கருவனூரில் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மதுரை கருப்பாயூரணி காவல்நிலையத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத், அர்ஜுன் சம்பத் சம்மன் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தபோது, ”இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் தனது X தளத்தில் உறுதிபடுத்தாத தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள செக்கானூரணி சம்பவத்தில் நடைபெற்ற காரணம் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் அர்ஜுன் சம்பத் அந்த சம்பவத்திற்கான காரணத்தை தவறான தகவலை பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக எதற்காக தவறான காரணத்தை பதிவிட்டார் என விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளோம், அவர் எந்த அடிப்படையில் பதிவிட்டார் என கூறி பதிவிட்டதை ஒத்துக்கொண்டால் அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மதுரையில் முக்கிய குற்றசம்பவங்களை கண்டறிந்த காவல்துறை குறித்த செய்தி - Crime: கோடைகாலத்தில் கொள்ளை.... ஒரே குடும்பத்தை சேர்ந்த கும்பல் கைது - 180 நகைகள் மீட்பு
சமூகவலைதள பக்கங்கள் கண்காணிப்பு குறித்த கேள்விக்கு
மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து தனிப்பிரிவு உருவாக்கி அதன் மூலமாக சமூகவலைதளப்பக்கங்களை முழுமையாக கண்காணித்துவருகிறோம் எனவும், ஏற்கனவே கர்நாடகாவில் தமிழரை தாக்குவதாக பதிவிட்ட நபர் மீதும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் தாக்குவதாக பதிவிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் எனவும்.
கருவனூரில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவி வருவது குறித்த கேள்விக்கு :
மதுரை கருவனூர் கிராமத்தில் காரை எறித்த நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. உரிய ஆதாரம் கிடைத்தவுடன் அதனடிப்படையில் கைது செய்வோம் எனவும், கருவனூரில் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் என்றார்.
புளியங்குளம் மோதல் சம்பவம் குறித்த கேள்விக்கு :
மதுரை செக்காணூரணி அருகே புளியங்குளம பகுதியில் நடைபெற்ற இரு தரப்பு பிரச்சனை தொடர்பாக வீடியோ வெளியான விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அது சாதிய ரீதியான மோதல் இல்லை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் விஸ்வா என்ற நபரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை கைது செய்யவுள்ளோம் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
” மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ” - மலேசியாவில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை - காளையார் கோவிலில் பிரம்மாண்ட வரவேற்பு