AUS vs PAK LIVE Score: 368 ரன்கள் எடுத்தால் வெற்றி...தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான்!
AUS vs PAK LIVE Score Updates: உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து திணறிவருகிறது.
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி, பாகிஸ்தான் அணி 40.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ஓவர்கள் முடிவில் 269 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
35 ஓவர்கள் முடிவில் 233 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
31 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
25 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இமாம்-உல்-ஹக் 70 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது. அதன்படி, அப்துல்லா ஷபீக் 61 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் விக்கெட்டை எடுப்பதற்கே ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. அதன்படி, அப்துல்லா ஷபீக் 63* ரன்களும், இமாம்-உல்-ஹக் 63* ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இமாம்-உல்-ஹக் அரைசதம் அடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அப்துல்லா ஷபீக் அரைசதம் அடித்தார். 53 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 49* ரன்களும், இமாம்-உல்-ஹக் 44* ரன்களும் எடுத்துள்ளனர்.
13 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 81 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 36* ரன்களும், இமாம்-உல்-ஹக் 38* ரன்களும் எடுத்துள்ளனர்.
10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 59 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 22* ரன்களும், இமாம்-உல்-ஹக் 31* ரன்களும் எடுத்துள்ளனர்.
விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்த பாகிஸ்தான் அணி.
7 ஓவர்கள் முடிவில் நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது.
நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 20 ரன்களுடன் விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களத்தில் நிற்கின்றனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவர் வீசிய மிட்செல் ஸ்டார்க் 4 வொய்ட்களை வீசியுள்ளார்.
பாகிஸ்தான் அணி 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் அஃப்ரிடி மட்டும் ஒரே ஒரு மெய்டன் ஓவர் வீசியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் ஹாரீஸ் ராஃப் 8 ஓவர்கள் பந்து வீசி 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி சார்பில் அஃப்ரிடி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவர், மிட்ஷெல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னஸ், மிட்ஷெல் ஸ்டார்க் மற்றும் ஹாசில்வுட் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி மிரட்டியுள்ளார். இவர் 10 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் ஓவர் வீசி, 54 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வார்னர் 163 ரன்களும், மார்ஷ் 121 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அஃப்ரிடி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை அஃப்ரிடி பந்துவீச்சில் இழந்து வெளியேறினார். இவர் 21 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஆஸ்திரேலியா அணி 47 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 351 ரன்கள் சேர்த்து, விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டினை இழந்து 340 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். இவர் 14 பவுண்டரி 9 சிக்ஸர் விளாசினார்.
116 பந்துகளை எதிர்கொண்ட வார்னர் அதில் 14 பவுண்டரி 8 சிக்ஸர் உட்பட 151 ரன்கள் விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 297 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. களத்தில் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 151 ரன்களுடன் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்மித் தனது விக்கெட்டினை மோசமான ஷாட் ஆடி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 9 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்தார்.
ஆஸ்திரேலியாவின் வார்னர் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தனர். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு எடுத்த அதிபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா அணியின் மார்ஷ் தனது விக்கெட்டினை அஃப்ரிடி பந்து வீச்சில் 33.5வது ஓவரில் இழந்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் அப்போது 259 ரன்களாக இருந்தது.
33.1 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 251 ரன்கள் சேர்த்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா தரப்பில் இதுவரை சதம் அடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடி சதம் விளாசியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 32 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஜோடியான வார்னர் மற்றும் மார்ஷ் தங்களது சதத்தை விளாசி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
100 பந்துகளில் தனது உலகக் கோப்பை சதத்தை எட்டினார் மிட்ஷெல் மார்ஷ் இவர் 10 பவுண்டரி 6 சிக்ஸர் விளாசினார்.
85 பந்துகளை எதிர்கொண்ட வார்னர் 7 பவுண்டரி 6 சிக்ஸர்கள் விளாசி தனது சதத்தினை விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி 30 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 208 ரன்கள் சேர்த்துள்ளது. வார்னர் 99 ரன்களுடனும், மார்ஷ் 96 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அதிரடியாக விளையாடி வரும் மிட்ஷெல் மார்ஷ் 95 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
29 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 199 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் வார்னர் 80 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
மிட்ஷெல் மார்ஷ் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி, பாகிஸ்தானுக்கு தலைவலி கொடுத்து வருகிறார், இவர் இதுவரை மட்டும் 9 பவுண்டரி 5 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
சிறப்பாக விளையாடி வரும் வார்னர் 77 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸர் விளாசி 93 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
ஆஸ்திரேலியா அணியின் ரன்ரேட் தொடக்கத்தில் 9 ரன்களுக்கு அருகில் இருந்தது. இதனால் செய்வதறியாமல் திகைத்த பாகிஸ்தானுக்கு, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட்டை குறைத்துள்ளனர். 26 ஓவர்கள் முடிவில் 6.77ஆக உள்ளது.
25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 173 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான வார்னர் 77 ரன்களும் மிட்ஷெல் மார்ஷ் 74 ரன்களும் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
18, 19 மற்றும் 20 ஆகிய ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இந்நிலையில், 21வது ஓவரின் கடைசி பந்தில் மார்ஷ் ஒரு சிக்ஸர் விளாசினார். இது போட்டியின் 9வது சிக்ஸர் ஆகும்.
20.2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 149 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக வார்னர் 71 ரன்கள் சேர்த்துள்ளார்.
16 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 15 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் குவித்துள்ளதால், அணியின் ரன்ரேட் 8.53 ஆக உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடிகளான வார்னர் மற்றும் மார்ஷ் அதிரடியாக விளையாடி தங்களது அரைசதத்தினைக் கடந்துள்ளனர். 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 128 ரன்கள் சேர்த்துள்ளது.
40 பந்துகளை எதிர்கொண்ட மிட்ஷெல் மார்ஷ் அதிரடியான ஆட்டத்தினால் அரைசதம் விளாசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடி 14 ஓவர்களில் தங்களது விக்கெட்டினை இழக்காமல், 119 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மிட்ஷெல் மார்ஷ் 38 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நெருங்கியுள்ளார்.
தொடக்க வீரரான வார்னர் தனது அதிரடி ஆட்டத்தினால் 39 பந்துகளில் தனது அரைசதத்தினன் விளாசி சிறப்பாக விளையாடி வருகின்றார்.
12.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் சேர்த்துள்ளது.
36 பந்துகளில் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தினால் 48 ரன்கள் குவித்து அரைசதத்தினை நெருங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி 11.1 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள் குவித்து விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடு வருகின்றது.
ஆஸ்திரேலியா அணி இதுவரை அதாவது முதல் 10 ஓவர்களில்ம், 10 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் விளாசியுள்ளது. 82 ரன்களில் 64 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸரில் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் தற்போதைய ரன்ரேட் 8.2 ஆக உள்ளது.
முதல் 9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 10வது ஓவரை வீசிய ஹாரிஸ் ராஃப் அந்த ஓவரில் ஒரு வைய்டு, 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட மொத்தம் 24 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
இந்த தொடரில் இதுவரை அனைத்து அணிகளும் இணைந்து 800 பவுண்டரிகள் விளாசியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 8.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை எட்டியுள்ளது.
இந்த போட்டியின் 7வது ஓவரை வீசிய அஃப்ரிடி அதனை மெய்டன் ஓவராக வீசியுள்ளார். இதன் மூலம் இந்த போட்டியில் 7வது ஓவர் முதல் மெய்டன் ஓவராக பதிவாகியுள்ளது.
5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்துள்ளது.
5வது ஓவரில் வார்னர் கொடுத்த எளிமையான கேட்சினை பாகிஸ்தான் அணியின் உசாமா மிர் தவறவிட்டார்.
4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடி வருகின்றது. மூன்று ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
Background
உலகக் கோப்பை 2023 ல் இன்றைய 18வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகள் மோதும் போட்டி எம்.சின்னசாமி மைதானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
உலகக் கோப்பை 2023ல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது. அதேபோல், இந்தியாவுக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் தற்போது அடுத்த போட்டிக்காக பெங்களூரு வந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் போட்டி விவரங்கள்:
போட்டி- ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், 18வது போட்டி, உலகக் கோப்பை 2023
இடம் - எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு, கர்நாடகா
ஆஸ்திரேலியா எப்படி..?
இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, இலங்கையை பெரிய ஸ்கோரை அடிக்கவிடாமல் தடுத்தது. ஆடம் ஜாம்பா உள்பட அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்த, பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஸ் இங்கிலிஸ் ஆகியோர் உலகக் கோப்பையில் முதல் அரைசதங்களை பதிவு செய்தனர். ஆடம் ஜம்பாவுக்கு 150 ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்களை எடுக்க 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏழு பதிப்புகளிலும் ஆஸ்திரேலியா ஒவ்வொரு முறையும் நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் எப்படி..?
உலகக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியுடன் வலுவான தொடக்கத்தை பெற்ற பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக பாபர் அசாம் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த 19 ஒருநாள் போட்டிகளில், ஷஹீன் அப்ரிடி ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பெங்களூர் பிட்ச் யாருக்கு சாதகமானது..?
பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியம் ஆடுகளம் பேட்டிங்கு செய்யும் வீரர்களுக்கு சொர்க்கம் என்றே கூறலாம். எனவே, இன்றைய போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஸ்கோரை இங்கு எதிர்பார்க்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இரு அணிகளுக்கும் இடையே 107 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆஸ்திரேலியா 69 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்தது. 1 போட்டி டிரா ஆனது. ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
மழைக்கு வாய்ப்பு இருக்கா..?
பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை மதியம் 29-30 டிகிரி செல்சியஸாகவும், மாலையில் 24-27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். எனவே, மழை பெய்ய வாய்ப்பில்லை.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்) , சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -