மதுரை சுண்ணாம்பு காளவாசல் பகுதிதை சேர்ந்தவர்கள் குமார் - முனியம்மாள் தம்பதியினர். இவர்களது மகள் மகாலெட்சுமி (19) அவரது உறவினரான பெயிண்டர் சந்தானகுமார் என்பவரை கடந்த ஆண்டு ஜூன்-24ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி கணவர் சந்தானக்குமார் மனைவி மகாலெட்சுமியை அடித்து துன்புறுத்தியதோடு தலையணையை பயன்படுத்தி முகத்தில் அழுத்தி, கழுத்தில் துணியால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் சந்தானக் குமார் தாக்கியதால் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வெளியேறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடிரென மூளை நரம்பு பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தற்போது மகாலெட்சுமியின் கைகால்கள் முழுவதிலும் செயலிழந்துவிட்டது. இதனிடையே தனது மகள் மகாலெட்சுமிக்கு மருத்துவ நிதியுதவி அளிக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குமார் மற்றும் பெண்ணின் உறவினர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X* இங்கே கிளிக் செய்யவும்.
இது குறித்து மகாலெட்சுமியின் மாமியார் செய்தியாளர்களிடம்...," சொந்தக்கார பொண்ணு என கல்யாணம் செஞ்சு வச்சோம். ஆனா ரெண்டு பேருக்கு சண்டை வந்துட்டதால இவ்ளோ பிரச்னையும் ஏற்பட்டுருச்சு. என் மகன் தப்பு செஞ்சுருந்தாலும், இப்ப என் மருமகளுக்கு உதவி செஞ்சுக்கிட்டு தான் இருக்கான். இப்பவே என் மருமக வந்தாளும் நாங்க கவனுச்சுக்குவோம். என் மருமக திருப்பூர்ல தனியார் கம்பெனில வேலை செஞ்சா, அங்க ஏற்பட்ட பாதிப்பால் கூட இப்புடி உடம்பு சரியில்லாம போயிருக்கலாம்" என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” மகாலெட்சுமி கணவர் அவரை தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை நிலவிவந்துள்ளது. இந்நிலையில் மகாலெட்சுமியின் உடல் நலன் மோசமாக உள்ளது. கணவன் துன்புறித்தியதால் அவரது உடல் மெலிந்துள்ளதா இல்லை, அவர் தனியார் நிறுவங்களில் வேலை செய்ததால் இவ்வாறு உடல்வாகு மாறியுள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அழுகிய மீன் 500 கிலோ... கெட்டுப் போன 50 ஆயிரம் ஆவின் பால் பாக்கெட்! ஒரே நேரத்தில் இரு நாற்றங்கள்!