தமிழகத்தில் கொரோனா முதல்  அலை  கோரத்தாண்டவம் ஆடியது எனலாம். இதனால்  நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு,  நாடு முழுவதிலும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திரையரங்குகள்,வணிக நிறுவனங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கினர். ஒரு நாள் கொரோனா பாதிப்பு  லட்சத்தை தாண்டி சென்றது. இறப்புகளும் கவலை அளிக்கக் கூடிய வகையிலேயே இருந்தது . தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலியாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து. இதனால் ஊரடங்கிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் தொடங்கியது.


ஆனால் அதன் முற்றுப்புள்ளியாக  கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வீரியத்துடன் தாக்கத் தொடங்கியது. கொரோனா இரண்டாம் அலையில் தமிழகத்தில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. கொரோனா இரண்டாம் அலை முதல் அலையை விட வேகமாகவும் வீரியமாகவும் பரவத் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது . கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கடைகள்,  பள்ளிகள் கல்லூரிகள்,  சுற்றுலாத்தலங்கள் கோயில்கள் என அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன.



பின்பு கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்ததால், தமிழகத்தில் படிப்படியாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சுமூகமாக இருந்தது. இதனால்  மக்கள் சுலபமாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வந்தனர். கொரோனா பரவலால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால், மக்களிடையே சுற்றுலா செல்வதற்கான ஆர்வம் அதிகரித்துக் காணப்பட்டது.



தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளது. ஊரடங்கு தளர்வுகளில் தற்போது வரை சுற்றுலா தளங்களுக்கான தளர்வுகள் அளிக்கப்படாமல் இருப்பதால் , சுருளி கும்பக்கரை, சோத்துப்பாறை, வைகை அணை போன்ற எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள்  அடைக்கப்பட்டுள்ளதால்  சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களிலும் இருந்தும் வெளி மாவட்டங்களிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.


தேனி மாவட்டத்தில் புலிகள் காப்பகமான அறிவிக்கப்படாத சுற்றுலாத்தலமாக  மேகமலை விளங்குகிறது. தமிழகத்தில் தற்போது போக்குவரத்து சீராக உள்ளதாலும்,  தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டுள்ளதாலும் மக்கள் மேகமலைக்கு  சென்று வருகின்றனர். ஆனால் வார இறுதி நாட்களில் மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.



கேரள மாநிலத்தில் தற்போது வரை கொரோனா பரவல் குறையாமல் உள்ளதால் கேரள மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து சென்று வருகிறது. இதனால் கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள  தேனி மாவட்டத்திலும் கொரோனா பரவல்  அதிகரிக்க தொடங்கி உள்ளது.  இதனால் தேனி மாவட்டத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.



மேலும் மேகமலையில் சுற்றுலா பயணிகள் போதிய விழிப்புணர்வின்றி அதிக அளவில் மேகமலை நோக்கி வருவதால், மறு உத்தரவு வரும் வரை மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் சார்பாக  தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை தொடர்பான தகவல் தெரியாமல் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் மேகமலைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் நெடுந்தூரத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் வேறு வழியில்லாமல் திரும்பி செல்கின்றனர்.